உலக உணவு வினியோக திட்டத்தில் முறைக்கேடு, பிரதேச சபை நடவடிக்கை எடுக்க தயார்.

0
265
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் உலக உணவு திட்டத்தின் கீழ் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச மக்களுக்கு வினியோகிக்கப்படும் உலர் உணவு செயற்பாடுகளில் முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி வலப்பனை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தமது அதிர்ப்தியை வெளியிட்டனர்.
வலப்பனை பிரதேச சபை மாதாந்த அமர்வு சபை தவிசாளர் ஆனந்த ஹித்தெட்டியகே தலைமையில் (30) மதியம் வலப்பனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தொடரில் இவ்வாறு அதிர்ப்தி வெளியிட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
உலக உணவு திட்டத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்தின் தோட்டப்பகுதிகள் உள்ளிட்ட கிராம புறங்களில் வறுமையை எதிர் கொள்ளும் குடும்பங்களை தேர்வு செய்து அக்குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு மற்றும் 05 லீட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது.
இருப்பினும் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை கிராமிய அபிவிருத்தி குழுவில் அங்கம் வகிக்கும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள்,அபிவிருத்தி அதிகாரிகள்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் என பலரால் பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வறுமையை எதிர்கொள்ளும் குடும்ப விபரங்களை குறித்த அதிகாரிகள் சரியா பெற்று இந்த உலக உணவு திட்டம் வலப்பனை பிரதேசத்தில் முறையாக முன்னெடுக்கவில்லை.
என்ற குற்றச்சாட்டை உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து அதிர்ப்தி வெளியிட்டனர்.
அதேநேரத்தில் உலக உணவு விணியோக திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள  குடும்பங்களை  தெரிவு செய்யும் விடயத்தில் அதிகாரிகள் தவறிழைத்து செயற்படுவதாக பிரதேச மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக மக்கள் பிரதநிதிகளான நாங்கள் மக்களுக்கு பதில் வழங்கிய சிறமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எனவே சபை தவிசாளர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இதுவரை விணியோகிக்கப்பட்டுள்ள உலக உணவினை தகுதியானவர்கள் பெற்றுக்கொண்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலாளரிடம் பெற்று அதை மீள் பரிசோதணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரனையை முன்வைத்தனர்.
இந்த பிரேரனையை ஏற்றுக்கொண்ட சபை தவிசாளர் உலக உணவு விணியோக திட்டத்தில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார்.
ஆ.ரமேஸ். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here