க.பொ.த சாதாரண தரத்தில் 6ஆயிரம் பேர் சித்திபெறவில்லை

0
186

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த  சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை  6 ஆயிரமாக உள்ளதென  நேற்று பாராளுமன்னத்தில் தெரிவித்துள்ளார். இந்த 6 ஆயிரம் மாணவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது யார் எனவும் சபையில் கேள்வி எழுப்பியும் உள்ளார்.

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்போது பொருத்தமான ஆசிரியர்களை மாற்றீடு செய்துவிட்டே இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் உரையாற்றும் அனைவரும் அதிபர், ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை, கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறார்கள்.

நடைபெற்று முடிந்த சாதாரணதரப்  பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத 6 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது? 11 வருடங்கள் பாடசாலைகளில் கற்று எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? இது தொடர்பில் எவரும் பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here