தங்க பதக்கங்களை பெற்று தந்த மலையக வீரரான மணிவேல் சத்தியசீலன் கௌரவிப்பு  

0
459
இந்தியா ஆந்திரா மாநிலம் உடுப்பி மற்றும் பெங்களூர்,கோவா ஆகிய ஊர்களில் அடுத்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்  மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் தேசிய,சர்வதேசிய ஓட்ட வீரர்களும் பங்குபற்றவுள்ள  நிலையில் இலங்கை வீர்களும் அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
அந்த வகையில் தேசிய, சர்வதேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு தங்க பதக்கங்களை பெற்று தந்த மலையக வீரரான உடப்புஸ்ஸலாவை எமஸ்ட் தோட்ட மணிவேல் சத்தியசீலன்  இந்தியாவில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அவருக்கான பயண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளை வழங்க உடப்புஸ்ஸலாவை “ஏபர்நெட்”(Aburnet) ஆடைதொழிற்சாலை நிர்வாகம்,மற்றும் ஊழியர்கள் முன்வந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள ஓட்ட வீரர் மணிவேல் சத்தியசீலன் இம்மாதம் (09.11.2022) அன்று இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.
இதனையொட்டி இவருக்கு உட்சாகமளித்து,மத குருமார்கள் ஆசியளித்து அனுப்பும் முகமாக உடப்புஸ்ஸலாவை “ஏபர்நெட்”(Aburnet) ஆடைதொழிற்சாலை முகாமையாளர் சுதத் நாகஸ்ஹேன தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு
(02.11.2021) அன்று ஆடைதொழிற்சாலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மதகுருமார்கள்,அரசியல் பிரமுகர்கள்,வர்த்தகர்கள்,
ஆசிரியர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
இதன் போது ஓட்ட வீரர் மணிவேல் சத்தியசீலனுக்கு மத குருமார்கள்,விளையாட்டு பயிற்சிவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆசியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டதுடன் மணிவேல் சத்தியசீலனுக்கு முழு பயண செலவுக்கான  அனுசரணை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here