நோர்வூட் பிரதேசசபையில் உள்ள கோப்புகள் (File கள்) அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது ஆனால் ஐந்தாண்டு கால சபை செயற்பாடுகள் தோல்வி (Fail) என நோர்வூட் பிரதேசசபையின் சமர்வில் வட்டார உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் 06/12/2022 இன்று நோர்வூட் பிரதேசசபையின் டின்சின் மண்டபத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தை வேலு தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சபை தலைவரினால் 2023 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டது.இப் பாத்துட்டு அறிக்கைக்கு எதிர்பினை தெரிவித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் சபையில் உரையாற்றுகையில் தலைவர் அவர்களே 2018 ஆம் ஆண்டு முதலாவது சபையமர்வில் எனது முதல் உரையை நினைவுபடுத்தி உரையாற்ற விரும்புகிறேன்..
” எதிர்க்கட்சி என்பது எதிர்க்கும் கட்சி அல்ல ” மக்களுக்கான நல்ல விடயங்களுக்கு ஆதரவாகவும் அதேபோல மக்களுக்கு நன்மைப்பயக்காத விடயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாகும்.
ஆகவே , நல்லெண்ண அடிப்படையில் இந்த வருட பாதீட்டுக்கு ஆதரவளிக்கின்றோம் அதே போல நீங்களும் நிறம், பிரதேசம் , கட்சி, பாராது சமமான சேவையை முன்னெடுங்கள் நாங்கள் மக்களால் அனுப்பிவைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்மை அனுப்பியவர்கள் அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள் ” என்று பேசியிருந்தேன்
ஆனால் , நீங்கள் ஒவ்வொறு வருடமும் பக்கச்சார்பாகவே நடந்துக்கொண்டமையினால் அடுத்த வருடம் பாதீட்டை எதிர்த்தோம் அதற்கடுத்த வருடம் வெளிநடப்பு செய்தோம் மீண்டும் அடுத்த வருடம் எதிர்த்து வாக்களித்தோம் ஆனால் உங்களில் மாற்றம் வரவில்லை.
தலைவர் அவர்களே நன்றி தெரிவிப்பது தமிழர் மரபு இன்று உங்களது பிரதான உரையில் நான்காண்டு காலத்தில் நோர்வூட் பிரதேசசபைக்கு நிதி வழங்கிய அமரர் ஆறுமுகம் தொண்டமான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரம் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தீர்கள் அவர்களுக்கு நானும் நன்றி தெரிவிக்கின்றேன்.
அதே போல நீங்கள் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகள் அதிகரிப்பில் முன்னின்று செயற்பட்ட இந்த நோர்வூட் பிரதேசசபையையும்
பெற்றுத்தந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களான மனோ கணேசன் பழனி திகாம்பரம் ராதாகிருஸ்ணன் மற்றும் நல்லாட்சி அரசிற்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு சபையின் ஆயுட்காலம் முடிவடையும் இத் தருணத்திலும் வருமானம் இல்லை என்றே கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள் ஆனால் நான் வருவாயை பெற்றுக்கொள்ள கூடிய எத்தனையோ பிரேரணைகளை முன்வைத்த போது அதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
தலைவரே ஆரம்பகாலத்தில் அனைத்து உறுப்பினர்கள் தங்களுடைய பிரதேச பிரச்சினைகளை தேவைகளை தொடர்ந்து பிரேணைகளாக முன்வைத்து பேசி வந்தனர் ஆனால் பின்னாலில் மாதாந்த சபையமர்வில் யாருமே பிரேரணை முன்வைப்பதை தவிர்த்து விட்டனர் இதில் உங்களது ஆதரவு தரப்பினரும் கூட,
இதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் உங்கள் மீதான அதிர்ப்தியை அவ்வாறு வெளிப்படுத்தினர் பிரேரணைகளை நீங்கள் கண்டுக்கொள்ளாமையின் வெளிபாடுகளே அவை.
அதே போல உங்களது இன்றைய உரையில் பலகோடி ரூபாய்க்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்துள்ளதாக வாசித்தீர்கள் உங்களது கட்சி காரர் ஒருவருக்கும் எங்களுடைய சமர்வில் வட்டார மக்கள் வாக்களித்து அனுப்பினார் அதற்காக இந்த சபை செய்த அபிவிருத்தி திட்டங்கள் என்ற ஒன்றுமே இல்லை ஆகவே உங்களிடத்தில் பிரதேசவாதம் உண்டோ என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் எனது வட்டார உறுப்பினர் காமராஜ் அவர்களின் உரையின் போது ஒஸ்போன் தோட்டத்திலும் காசல்ரீ கடை வீதியிலும் வாசிகசாலை கட்டப்பட்டு குறையிலுள்ளதாகவும் அதனை நிறைவு செய்து மக்கள் பானைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேசினார்
ஆனால் ஒஸ்போன் வாசிகசாலைக்கு அடிக்கலை மட்டுமே வைத்து விட்டு சென்றீர்கள் அதே போல காசல்ரீ கடை வீதியில் மத்திய மாகாண ஆளுநரின் 10 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்ட வாசிகசலை முழுமை பெறாமல் கட்டாக்களி நாய்கள் தங்கும் இடமாக உள்ளது அதனை கவனத்தில் எடுங்கள்.
நோர்வூட் பிரதேசசபையின் கோப்புகள் (file )கள் அழகாக நேர்த்தியாக இருக்கிறது என்றாலும் சபையின் மக்கள் சேவை தோல்வி ( Fail ) என்று கூறிக்கொண்டு எனக்கு வாக்களித்த சமர்வில் வட்டார மக்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்து இந்த சபைக்கு அனுப்பிவைத்தை தலைவர் திகாம்பரம் அவர்களுக்கும் நன்றியை கூறிக்கொண்டு எனது வட்டார மக்களுக்கு பயன் இல்லாத 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை எதிர்த்து விடை பெறுகிறேன் என்றார்.
ஆ.ரமேஸ்.