உலகின் 100 பெண்களின் பட்டியலில் இடம்பெறும் இலங்கையர்

0
209

2022இல் உலகின் 100 பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமைகள் செயல்பாட் டாளரான சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார். பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பி. பி. சி., 2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க மற்றும் ஊக்கமளிக்கும் 100 பெண்களின் பட்டியலை 10ஆவது ஆண்டாக வெளியிட்டுள்ளது.

பிரபல மனித உரிமைகள் செயல்பாட்டாளரும், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியுமான சந்தியா குறித்து பி. பி. சி. பின்வருமாறு அறிமுகம் செய்துள் ளது. ‘மனித உரிமைகள் செயல்பாட்டாளர் மற்றும் பிரசாரகர்.

சந்தியா எக்னலி கொட இலங்கை உள்நாட்டு போரின் போது அன்புக்குரிய உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு உதவுபவர். இவரின் கணவர், பிரபல புலனாய்வு ஊடகவிய லாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொட, 2010, ஜனவரியில் காணாமல் ஆக்கப்பட்டார்.

புலனாய்வு செய்தி சேகரித்த பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான சந்தியா தொடர்ச்சியாக நீதி கேட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here