2023 இல் பொருளாதார நெருக்கடி வீரியம் அடையுமாம்

0
289

இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொட ஷரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2.9 மில்லியன் குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

யுனிசெவ் அமைப்பின் அண்மைய அறிக்கை படி, இலங்கையில் ஒவ்வொரு குடும்பங்களும் மேற்கொள்ளும் செலவில் 75 வீதம் உணவுக்காக செலவிடப்படுகின்றது.

ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும் போது, சுகாதாரம் மற்றும் கல்விக்கு மிகக் குறைவாகவே மிஞ்சும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here