இ. தொ. கா. முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டங்கள் பாரிய வெற்றியை தந்துள்ளது என்கிறார் ஜீவன் எம்.பி

0
368

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமை சார்ந்த விடயங்களில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் தான்தோன்றி தனமாகவும், உரிமைகளையும், இழப்புக்கான நட்ட ஈடுகளையும் வழங்காது தொழிலாளர்களை வீதிக்கு இறங்க வைத்தது. இந்த நிலையில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டங்கள் பாரிய வெற்றியை தந்துள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலளர் சந்தப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் இ.தொ.கா பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பிலுள்ள சௌமிய பவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் ஹொரண பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக தொழிற் சங்க நடவடிக்கைகள் ஈடுபட்டோம். இவ் தொழிற்சங்க நடவடிக்கை மாபெரும் வெற்றியை வழங்கியதுடன், மக்களிடத்தில் பெரும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இ.தொ.காவின் ஊழியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய மாறு தொழிற்சங்கத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமையால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தவுடன், தேயிலை நிறையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கும் தீர்வு காணபட்டதுடன்
மழைக்காலத்திற்கு வேறாகவும் வெயில் காலத்திற்கு வேறாகவும் கொழுந்து நிறை மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 15 வருட காலமாக பெருந்தோட்டத்தில் சேவை புரிந்த சிவக்குமார் மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் அனுமதிமதித்த சந்தர்ப்பத்தில் இறந்து விட்டார். இச் சந்தர்ப்பத்தில் பெருந் தோட்ட அதிகாரிகள் இவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட ரீதியாக பேச்சு வார்த்தை நடாத்தி குறைந்த அளவு பணத்தை வழங்க ஏற்பாடு செய்தனர்.

நாங்கள் தற்பொழுது எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக் குடும்பத்தினருக்கு ரூ 50 இலட்சமும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட காணியும் மேலும் அவர் மனைவிக்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
அத்துடன் செந்தில் தொண்டமான் தலைமையில் பதுளை, அக்கரபத்தனை பெருந் தோட்டத்திலும் வெற்றியை கொண்டுள்ளதுடன், மஸ்கெலியா பகுதியிலும், தவிசாளர். ராமேஸ்வரன் அவர்களது பகுதியான நுவரெலியாவிலும் வெற்றியை கண்டது என்றார்.

இவ் ஊடக சந்திப்பில் இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தவிசாளருமான மருத பாண்டி ராமேஸ்வரன், சட்டத்தரணி மாரிமுத்து ஆகியோர் கலந்துக்கொண்டனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here