தூதரக கிரிக்கெட் கமிட்டி இராஜதந்திர தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா. முகவர் உறுப்பினர்களுக்கிடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக மென் பந்து ஐந்து ஓவர்கள் கொண்ட இராஜதந்திர கிரிக்கெட் போட்டியை ராஜகிரிய சந்திரா சில்வா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (10) திட்டத் தலைவர் தென்னாப்பிரிக்க தூதரகத்தின் எம்.எஸ்.எம். ஷிராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சிறந்த பந்து வீச்சாளர் வளைகுடா அணியைய் சேர்ந்த மொஹ்மட் அசீம் கௌரவ அதிதியாக டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர்ரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இறுதிப்போட்டியில் வளைகுடா அணி அமெரிக்க அணியை தோற்கடித்தது. வளைகுடா அணியின் தலைவர் சமன் புஷ்பகுமார சாம்பியன் கிண்ணம் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப்பரிசையும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ். இ. ஷால்க் இடமிருந்து பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதவர் காலித் நாசர் அல் அமரி, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், பண்களாதேஷ் துணை உயர் ஸ்தானிகர், நேபாள் துணை உயர் ஸ்தானிகர், இந்திய துணை உயர் ஆணையர் மற்றும் போட்டியின் பிரதான அனுசரணையாளர் கிளாசிக் டிராவல்ஸ் பணிப்பாளர் சப்ரி பஹவுடீன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.