மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய இராணுவ வீரர் ஒருவரை இராகலை பொலிசார் (12) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர் இராகலை மந்திரித்தென்ன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர் (12) மாலை மது அருந்திவிட்டு தனது முச்சக்கர வண்டியில் பெண் ஒருவரையும்,இவரின் நண்பரான விமானபபடை வீரரையும் ஏற்றி வந்துள்ளார்.
இதன்போது வேக கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டி இராகலை தபால் கந்தோர் அருகில் பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளானதுடன்,விமானப்படை வீரர் மற்றும் வண்டியை செலுத்திய இராணுவ வீரர் ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இதன்போது சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராகலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் இவர்களை மீட்டுள்ளனர்.
இதன்போது பலத்த காயத்திற்கு உள்ளான பெண்னை அருகில் உள்ள இராகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதேநேரத்தில் சிறு காயங்களுடன் மீட்க்கப்பட்ட இராணுவ வீரர் மற்றும் விமானப்படை வீரர் ஆகியோரை பொலிசார் பரிசோதித்த போது இவ்விருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரு வீரர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ள பொலிசார் மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.
விமானப்படை வீரரை போதை தெளியும் வரை பொலிஸ் காவலில் வைத்து பின் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அத்துடன் இராணுவ சிப்பாய் செலுத்திய முச்சக்கர வட்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் இராணுவ சிப்பாயை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்.