ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்-கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த தாய்

0
388

9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த தாயும் சேய்களும் மொராக்கோவில் இருந்து சொந்த நாடான மாலிக்குத் திரும்பினர்.

2021ம் ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்லி என்ற பெண், பிரசவத்திற்கு முன் சிறப்பு சிகிச்சைக்காக மொராக்கோ அனுப்பப்பட்டார். அங்கு 5 பெண் குழந்தைகள், மற்றும் 4 ஆண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்த நிலையில், மொராக்கோவின் காசாபிளாங்கா நகரில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வசித்து வந்தார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஹலிமா, தற்போது சிகிச்சைகள் அனைத்தும் நிறைவுற்று சொந்த நாடான மாலிக்குத் திரும்பியுள்ளார்.

26 வயதான ஹலிமா சிஸ்ஸே. 2021-ம் ஆண்டு மே மாதம் 4 -ம் திகதி ஹலிமாவுக்கு அறுவை சிகிச்சைமூலமாகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளுக்கு தற்போது ஒன்றரை வயதான நிலையில், அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார், குழந்தைகளின் தந்தை அப்தெல் காதர் அர்பி.

ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்து ஆரோக்கியத்துடன் வாழும் குழந்தைகள் என இக்குழந்தைகள், கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே, ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பது என்பது இதற்கு முன் இரு முறை நடந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் உயிரோடு நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் தந்தை, மாலி ராணுவத்தில் பணிபுரிகிறார். மொராக்கோவில் உள்ள மருத்துவமனையில் பிறந்து இந்தக் குழந்தைகள் அங்கேயே பராமரிக்கப்பட்டு தனது சொந்த நாடான மாலிக்குக்கு திரும்பியுள்ளனர்.

குழந்தைகளின் அம்மா அர்பி, “இது எளிமையான விஷயம் அல்ல, மிகவும் சிறப்பானது. சில நேரங்களில் சோர்வாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது, மிகவும் நிம்மதியாக இருக்கிறது.

சிரமங்களை எல்லாம் மறந்து விடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here