இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீடித்தார்.
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஐந்து நாட்களுக்கு தடையை தளர்த்தியுள்ளது.
அத்துடன், விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.