அதிகரிக்கும் உணவுப் பற்றாக்குறை கொவிட்–19 தொற்று போன்ற சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என முன்னணி சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உயரும் உணவு, எரிவாயு விலைகள் பல மில்லியன் பேரின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராக போராடும் சர்வதேச நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பீட்டர் சாண்ட்ஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒரு பக்கம் மக்கள் உணவின்றிப் பட்டினியில் உள்ளனர். இன்னொரு பக்கம் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் நோய்வாய்ப்படுகின்றனர் என்று சாண்ட்ஸ் குறிப்பிட்டார்.