2022 ஆம் ஆண்டுக்கான, 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன முக்கிய அறிவிப்பொன்ரற விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,
பகுதி இரண்டு வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் பாடப் புத்தகங்களிலுள்ள விடயங்கள் அடங்கிய பகுதி 2 வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது.
அதற்கமைய, பகுதி இரண்டு வினாப்பத்திரம் முற்பகல் 9.30 அளவில் வழங்கப்பட்டு, 10.45 அளவில் நிறைவுச் செய்யப்படும். அதில் 60 வினாக்கள் அடங்குகின்றன. பின்னர் 40 வினாக்கள் அடங்கிய பகுதி ஒன்று வினாப்பத்திரம், முற்பகல் 11.15க்கு வழங்கப்பட்டு மதியம் 12.15க்கு நிறைவு செய்யப்படும்.
இந்த முறை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும். பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர்கள், பாதுகாவலர்கள் செல்ல முடியாது. பரீட்சார்த்திகளை பாடசாலை ஆசிரியர்களே அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.