பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னணி தொழிலதிபர்!

0
223

பிரபல முன்னணி தொழிலதிபரான தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச பதவி விலகவுள்ளதனையடுத்து, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும், அது முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி எனவும் தெரிய வருகின்றது.

இலங்கையின் தொழில்முனைவோர் மற்றும் Vallibel One PLC இன் தலைவர்/நிர்வாகப் பணிப்பாளருமான தம்மிக்க பெரேரா வெற்றிகரமான முதலீட்டாளராகவும் கருதப்படுகிறார்.

இலங்கையின் பணக்காரர்களில் ஒருவராக அறியப்பட்ட தம்மிக்க, நிறுவன மீள்-பொறியியல் மற்றும் மறுமலர்ச்சியில் நிபுணத்துவத்தின் சின்னமாகவும் அறியப்படுகின்றார். அவரது அசாத்திய திறமையின் காரணமாக 23 நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

உள்நாட்டுப் போரின் முடிவில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார் என்று கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here