உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை சுயவிபரங்களுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பத்தில், போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி சபையின் பெயர், உள்ளூராட்சி சபையின் எல்லைக்கு உட்பட்ட போட்டியிட விரும்பும் வட்டாரத்தையும் குறிப்பிட்டு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஜனவரி 10ம் திகதிக்கு முன்பதாக , இ.தொ.கா தேர்தல் பிரிவு கணக்காளர், இலக்கம் 72, சௌமியபவான், ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் பதிவு செய்யுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.