Breaking news- தேசிய துக்க தினம் 9.25- 9.27 வரை மௌனமாக இருக்க கோருகிறது அரசாங்கம்

0
271

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூறும் வகையில் இன்று 26 காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை அறிவித்துள்ளது.

இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அனர்த்தத்தினால் நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 35,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். மற்றும் 34 பிரதேச செயலகங்களில் உள்ள 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 502,456 பேர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ‘தேசிய துக்க தினம்’ இன்று நினைவுகூரப்படுகின்றது.
காலி பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான வைபவம் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here