நோர்வூட் பிரதேசசபையின் ஊடாக பொகவந்தலாவ பகுதியில் நேற்று செய்வாய்கிழமை ஆயூர்வேத வைத்தியசாலை மாற்றும் பொகவந்தலாவை பகுதியல் உள்ள பொது நூலகம் ஆகியன உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
ஆயூர்தேத வைத்தியசாலை, நோர்வூட் பிரதேசசபையின் 1.796921.22 ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் பொது நூலகம் 1.425000 ருபாய் நிதி ஒதுக்கீட்டிலும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேசசபையின் தவைர் ரவிகுழந்தைவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில, உபதவிசாளர் கிஸோகுமார், பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டாரா, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய, பிரதேசசபை உறுப்பினர்களான
கல்யாணகுமார், அருள்நாயகி, சரோஜா, அசோக்குமார், நோர்வூட் பிரதேசசபையின் செயலாளர், பிரதேசசபையின் உத்தியோகத் தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொகவந்தலாவை சதீஸ்