தம்மிக்க வருகை; ரணில் அதிருப்தி?

0
253

 

பிரபல முன்னணி தொழிலதிபரான தம்மிக்க பெரேராவுக்கு பசில் ராஜபக்சவின் நாடாளுமன்றத்தின் தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

தம்மிக்கவுக்கு பொருளாதாரம் தொடர்பான அமைச்சுப் பதவி வழங்க வேண்டி வரும் என்பதனாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பினை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ரணிலுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, 20 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்தான் உங்களை பிரதமராக நியமித்துள்ளேன் என்பதனை நினைவில் வைத்திருங்கள் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது.

அதேபோன்று, கோட்டாபய ராஜபக்சவினை கடந்த வாரம் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதற்கு கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கோட்டாபாய ராஜபக்சவிடம் ரணில் தெரிவித்த போது தாராளமாக பதவி விலகலாம் என்று கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்ற வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here