இலங்கை எழுத்தாளருக்கு இந்தியாவில் விருது

0
270

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை மற்றும் சேலம் அக்ஷ்ய் டிரஸ்ட் ஆகிய 4 அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான இவ்வாண்டு (2022) முத்தமிழ் கலைஞர் பெருஞ்சுடர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையருக்கும் விருது வழற்கப்பட்டது.

அந்தவகையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பிரதி அதிபருமான றிப்கா அன்ஸார் ‘செந்தமிழ் சுடர்’ கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here