டிசம்பரில் பாண் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கும்?

0
372

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் பலவேறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தற்போது 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் செல்லும் பயணத்திற்கு டிசம்பர் மாதம் 1790 ரூபா செலவாகும் எனவும், அதித பணவீக்கம் மிகவும் பயங்கரமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது. இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது. மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரிக்கும். இது சகல வழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here