உங்களது ராசிக்கு இன்றைய பலன் எப்படி? -19.06.2022

0
386

மேஷம் : அசுவினி : உங்கள் செயலில் இருந்த தடைகள் விலகும். நினைத்தபடி நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
பரணி : நிதி நிலையில் இருந்த நெருக்கடி குறையும். உங்கள் முயற்சிகள் பலிதமாகும்.
கார்த்திகை 1 : நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : யோசித்து செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் தாமதமாகும்.
ரோகிணி : உங்கள் செயலில் பின்னடைவு ஏற்படும். தைரியம் தேவையான நாள்.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் கவனம் தேவை. பிறரால் சிறு, சிறு சங்கடம் தோன்றும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : தொழிலில் லாபம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.
திருவாதிரை : விரும்பும் ஒரு செயல் இனிதே நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் 1, 2, 3 : கொடுத்த பணத்தை தடையின்றி பெற வழி வகை செய்வீர்கள்.
கடகம் : புனர்பூசம் 4 : நேற்று தடைபட்ட செயல் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும்.
பூசம் : தடைகளைத் தாண்டி தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பிறரால் மதிக்கப் படுவீர்கள்.
ஆயில்யம் : எதிரிகள் பலமிழந்து போவார்கள். எதிர்பார்த்த நன்மை இன்று கிடைக்கும்.

சிம்மம் : மகம் : பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். குடும்பத்தை மகிழ்ச்சியில் திளைக்கும்.
பூரம் : உங்கள் செல்வாக்கால் செயல் ஒன்றை நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள்.
உத்திரம் 1 : குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : சரியான பாதையில் செல்லும் உங்களது தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
சித்திரை 1, 2 : நேற்றை செயல் இன்று நிறைவேறும். இருப்பினும் விழிப்புணர்வு தேவையான நாள்.

துலாம் : சித்திரை 3, 4 : குடும்பத்தில் ஒருவர் நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க உதவி செய்வார்.
சுவாதி : தொழிலில் உங்கள் முயற்சியால் லாபம் காண்பீர்கள்.புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : துணிச்சலுடன் செயல்பட்டு உங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4 : குடும்பத்திற்காக சுபச்செலவு செய்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
அனுஷம் : திட்டமிட்ட செயல் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு பொது இடங்களில் உயரும்.
கேட்டை : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி கூடி வரும்.

தனுசு : மூலம் : மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்கள் செயலில் குழப்பம் ஏற்படும்.
பூராடம் : நீங்கள் எதிர்பார்த்த நன்மை தாமதமாகி கிடைக்கும். அவசரம் காட்ட வேண்டாம்.
உத்திராடம் 1: தொழிலில் நெருக்கடி உண்டாகும். அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : சில செலவுகள் மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
திருவோணம்: உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதால் நட்பு வட்டம் விரிவடையும்.
அவிட்டம் 1, 2 : எதிர்பாராத செலவுகளால் தடுமாற்றம் அடைவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : புதிய முயற்சி அனுகூலமாகும். உங்கள் நிதிநிலை உயரும்.
சதயம் : பழைய முதலீட்டில் இருந்து இன்று லாபம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. பூரட்டாதி 1, 2, 3 : எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் வீடு வந்து சேரும்.

மீனம் : பூரட்டாதி 4 : அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி : உங்களுடைய செயலை மற்றவர்கள் பாராட்டுவார்கள். அமைதி தேவையான நாள்.
ரேவதி : நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here