ஆபாசப் படங்களில் தோன்றுபவர்களுக்கு விஷேட பாதுகாப்பு

0
302

ஆபாசப் படங்களில் தோன்றுபவர்களை பாதுகாப்பதற்கு விஷேட சட்ட மூலமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜப்பானில் முதல் முறை சட்டம் ஒன்று பல பில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் துறையில் உள்ள சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய நடவடிக்கை என்று இந்த சட்டம் வரவேற்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் வயது வந்தோரின் வயது 20 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபாச திரைப்பட தயாரிப்பாளர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி ஆபாசப் படங்களில் தோன்றுபவர்கள் எந்தக் காரணமும் கூறாது ஓர் ஆண்டுக்குள் தமது ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவும் தண்டப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிகழும் பட்சத்தில் அந்த வீடியோவை அழிப்பதற்கு மற்றும் மீளப்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here