உணவு நெருக்கடியால் 50 இலட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் – பிரதமர்

0
334

எதிர்காலத்தில் உணவு நெருக்கடியானது 40 தொடக்கம் 50 இலட்சம் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக, அதன் 225 பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏனையவை அமைச்சுகள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் பிரித்து கையளிக்கப்பட வேண்டும்.

இதற்காக பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது. மீனவ சமூகத்தினருக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் விவாசயத்திற்கு அவசியமான எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் பணித்ததுடன் குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு விசேட முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here