இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அட்டன் பஸ்டிப்போவில் இதுவரை சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பயண அட்டை (Season Ticket) விநியோகிக்கப்பட்டுள்ளதாக அட்டன் – டிப்போ முகாமையாளர் டபிள்யூ.ஜி.கே. கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வழமையாக 16 தொடக்கம் 18 இலட்சம் ரூபா வரையிலேயே பயண அட்டைகள் விநியோகிக்கப்படும். இந்நிலை கடந்த மே மாதம் 32 இலட்சம் ரூபாவிற்கு உயர்வடைந்துள்ளது.
இந்தத் தொகை ஜுன் மாதமளவில் 50 இலட்சம் ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் ஊழியர்களே இவ்வாறு பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொண் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-முத்து-