தேங்காய் விலை 200 ரூபா ?

0
317

தேங்காய் ஒன்றி விலை 200 ரூபாவுக்கு உயர்வடையவுள்ளதாகத் தெரிய வருகிறது தேங்காய் உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை ரூ.200 வரை உயர்த்துவது அவசியமாகிறது என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினரான பேராசிரியர் தீபால் மேத்யூ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை 2025 இற்குப் பிறகு நீடித்தால் தேங்காய் இருக்காது, மேலும் நாங்கள் தேங்காய் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், உரத்தை கொண்டு வருவதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .

ஒவ்வொரு மாதமும் சுமார் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டில் நுகரப்படுகின்றன, மேலும் 100 மில்லியன் தேங்காய்கள் பதப்படுத்தும் தொழிலுக்கு அனுப்பப்படுகின்றன என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here