இ.தொ.க.விலிருந்து நுவரெலியா பிரதேச சபை தலைவர் நீக்கம்

0
364

நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 15ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை குழு கூட்டத்தில் வேலு யோகராஜா மீதான குற்றம் விசாரணை செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆராயப்பட்டு, உண்மைத்தன்மையின் அடிப்படையில் நிர்வாக சபையினால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here