ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் இடம்பெற்றுள்ளது. இதன் போது 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், பல மாவட்டங்களில் காணப்பட்ட சொத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு நகரமான கோஸ்டிலிருந்து 44கிமீ (27 மைல்) தொலைவில் உள்ளூர் நேரப்படி 01:30க்குப் பிறகு (21:00 செவ்வாய்க் கிழமை GMT) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பலர் நித்திரையில் இருந்ததாகவும் தெரியவருகிறது.