சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இதற்காக நுகர்வோருக்கு அனுமதியை வழங்குவதற்கும் அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொறுத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன. இதனூடாக பகல் வேளையில் மின்சாரத்தை பெற முடியுமாயின் தற்போது மின்னுற்பத்திகாக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி இரவு வேளையில் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.
இதற்கமைய 24 மணிநேரமும் துண்டிப்பின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.