வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைவாக வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களுக்கே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4,5, 6 இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் 6,7,8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்தப்படும் தினம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.