வரலாறு படைத்தது இலங்கை அணி – கேக் வெட்டி கொண்டாட்டம்

0
384

இலங்கை மண்ணில் வைத்து 30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரொன்றை இலங்கை அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.

இறுதி பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சு.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக சரித் அசலங்க தெரிவானார்.

2010 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடரொன்றை இலங்கை அணி கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வைத்து சர்வதேச ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here