லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இதன்போது கோரப்பட்டதுடன், குறித்த நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களும் இந்த பதிவுகளில் உள்வாங்கப்பட்டனர்.
அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் ஹட்டன்-டிக்கோயா நகர சபை, ஹட்டன் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.