சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக தெரிய வருகிறது.
தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள அமைச்சர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்படும் வரை தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய நிறுவனமொன்றிடம் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணைகள் முடியும் வரை பதவியில் இருந்து விலகுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.