கோட்டா விலகிய பின்னர் என்ன நடக்கும்?

0
675

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரச தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் என்ன நடக்கும் என்பதனை சிங்கள இணையத்தளம் ஒன்று விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பதவிக்காலம் முடிவதற்குள் அரச தலைவர் பதவி விலகினால், அந்த பதவி வெற்றிடமாகி விடும். அவ்வாறான நிலையில், அரசியலமைப்பின் 40 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும்.

அரச தலைவர் பதவியில் இருந்து விலகிய ஒரு மாதத்திற்குள் அரச தலைவரின் வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை அரச தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரச தலைவர் அந்த பதவியில் இருந்து விலகினால், அந்தப் பதவிக்கு மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.

அத்தகைய கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி;யின் பதவி விலகலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, வெற்றிடமாகவுள்ள அரச தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

ஜனாதிபதி; பதவிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபரை பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த நபர் அளிக்கப்பட்ட வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை பெற்று தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க அரச தலைவர் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுத்துள்ளது.

ஜனாதிபதி;; பதவி வெற்றிடத்திற்கும் புதியவர் ஒருவர் பதவியேற்பதற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தற்போதைய பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார். இந்த காலப்பகுதியில் பிரதமராக செயற்படுவதற்கு அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நியமிக்கப்படல் வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முன்னைய ஜனாதிபதியின் மிகுதி காலத்திற்கு பதவியில் இருக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here