ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 13ஆம் விளகுவதாக உறுதியளித்த ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் நாளை இந்த அறிவிப்பை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவார். கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தில் ஜூலை 13ஆம் திகதியிட்டே கையளித்துள்ளார். ஆயுதப்படைகளின் பாதுகாப்பிலேயே ஜனாதிபதி கோட்டாபய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை நாடாளுமன்ற சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் நாளை அறிவிக்ககப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 9 ஆர்ப்பாட்டத்துக்கு சற்று முன்பு, ஜனாதிபதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் பாதுகாக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், நேற்று காலை 9.30 மணியளவில் முப்படைத் தளபதிகளை ஜனாதிபதி நேரடியாக சந்தித்ததாகவும், அதன்பின்னர் அவர் நாட்டில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் நாட்டில் எங்கு இருக்கிறார் என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதுடன், புதிய ஜனாதிபதி பதவியேற்கவும், அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.