மாலைதீவில் தஞ்சமடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவே சிங்கப்பூர் நோக்கி பயணமாவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் திட்டமிட்டபடி அவர் பயணத்தை மேற்கொள்ளவில்லை என டெயிலி மிரர் தெரிவித்திருக்கின்றது.
ஏனைய பயணிகளுடன் இணைந்து பயணிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என கருதியிருக்கலாம். அதனால் தல அவர் தனிப்பட்ட ‘ஜெட் விமானம்’ ஒன்றை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாலியிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்றிரவு புறப்பட்ட ‘Singapore Air SQ437’ விமானத்தில் ஜனாதிபதியும் அவரது மனைவியும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் புறப்படவிருந்த போதிலும் அதனை அவர்கள் பாதுகாப்பு காரணங்களால் தவிர்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட ஜெட் விமானம் ஒன்றைப் பெற்று அதன் மூலமாக சிங்கப்பூர் செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் மாலைதீவு விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.