தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்காக 10 இலட்சம் பேர் வெற்றிகரமாக தமது பதிவுகளை செய்துள்ளனர் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளை பெறுவதற்காக இணையம் மூலம் அனுமதிப் பத்திரம் பெறும் முறைமை நேற்று முன்தினம் சனிக்கிழமை அறிமுகஞ் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலைக்குள் 10 இலட்சம் பேர் பதிவுகளை மேற் கொண்டுள்ளனர்.
பல வாகனங்களை கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஒரே தடவையில் முழு வாகனங்களையும் பதிவு செய்யும் நடைமுறை அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். சரிபார்க்கப்பட்ட பின்ன ஒவ்வொரு வாகனத்துக்கும் QR குறியீடு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசைகள் அகற்றப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் நடைபெறும். தேசிய எரிபொருள் பாஸ் (QR-CODE ) மற்றும் நம்பர் பிளேட்டின் கடைசி இலக்கப்படி கட்டாயம் இருக்க வேண்டும் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்