எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற முடிவை மொட்டு கட்சி எடுத்திருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அறிவித்திருப்பது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கருத்துடன் முரண்படுவதுடன், டளஸ் அழகப்பெருமவுக்குத்தான் மொட்டு வாக்களிக்கும் என்பது அவரது நிலைப்பாடு என்பதையும் அறிவித்துள்ளார். அவருடன் மொட்டு அணியைச் சேர்ந்த மேலும் இணைவதாவும் தெரிய வந்துள்ளது.
கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் வாக்கெடுப்பும் ரகசியமாக நடைபெறுவதால் – அதன் பின்னர் தமது தொகுதிகளுக்குச் செல்வது எவ்வாறு என பெரும்பாலான எம்.பி.க்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். இப்போதும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமது தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அச்சம் காரணமாக ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடுவது என்ற நிலைப்பாட்டை மொட்டு எம்.பி.கள் சிலர் எடுக்கலாம் என சிங்கள இணையத்தளம் ஒன்று மொட்டு உறுப்பினர்களை ஆதாரம் காட்டி வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருக்கின்றது.