ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நாடாளுமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.
வேட்பு மனு கோரல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தெரிவத்தாட்சி அதிகாரியாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க செயற்பட்டிருந்தார்.
அதற்கமைய, ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார எம்.பி. வழிமொழிந்தார்.
மேலும், அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார் அதனை ஹரிணி அமரசூரிய எம்.பி வழிமொழிந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என சபாநாயகர் அறிவித்தார்.