மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கொட்டும் மழையில் மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

0
186

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கொட்டும் மழையில் மத்தியில் நேற்று சனிக்கிழமை (18) மாலையில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் நேற்று மாலையில் 5.00 மணிக்கு இடம்பெற்ற முள்ளிவாய்கால் படுகொலையின் 15 வது ஆண்டு நினேவேந்தல் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.

இதில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்வர்களின் ஆத்மசாந்தி வேண்டி ஈகைச்சுடர் ஏற்றினர் இதன் போது அங்கு மழை பெய்ய தொடங்கிய நிலையில் மழையிலும் மத்தியிலும் மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

((கனகராசா சரவணன்))

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here