Breaking news- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் ஜனாதிபதி

0
340

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here