“மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளருக்கு!”

0
259
“மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளருக்கு!’  எனும் ஒற்றைக் கோரிக்கையை அரசுக்கும் சர்வதேசத்துக்கு ம்  வலியுறுத்தும் வகையில் அரசியல் தொழிற்சங்க பேதங்கள் கடந்து முன்கொண்டு செல்லப்படவிருக்கும் தொடர் கையெழுத்து  இயக்கத்தில் இணையுமாறு  மலையக பாட்டாளிகள் அரங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பேரணியின் முதலாவது ஒன்று கூடலும் நடை பயணமும்   சர்வதேச தேயிலைத் தினத்தையும் ( மே 21) சர்வதேச தொழிலாளர் தினத்தை யும் ( மே 01) நினைவு கூர்ந்து 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி  ஹங்குரங்கெத்த லூல்கந்துர தோட்டம்  ஜேம்ஸ் டெயிலர் ( James Taylor) நினைவிடத்தில் ஆரம்பமாகவுள்ளது..
ஜூன் முதலாம் திகதி காலை 11 மணிக்கு இலங்கைத் தேயிலையின் தந்தை ஜேம்ஸ் டெயிலர் சிலை பீடத்தில் ஒன்று கூடி “மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளருக்கு!” எனும் கோரிக்கையை கோஷமாக எழுப்பியவாறு முதலாவது தேயிலை நாட்டப்பெற்ற இடத்தை நோக்கி நடைபவணி  முன்னெடுக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இடம் பெறும் உரை அரங்கத்தில் பங்கு கொள்ளும் அமைப்புகள் சார்பில் உரைகள் இடம்பெறுவதுடன் கோரிக்கைக்கு ஆதரவான  கையெழுத்துக்களும்பெறப்படும்.
மலையகப் பாட்டாளிகள் அரங்கம் ஒழுங்கு செய்யும் இந்த ஆரம்ப நிகழ்வில் இணைந்து கொண்டு அரசியல் தொழிற்சங்க பேதங்களைக் கடந்து
“மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளருக்கு!”
எனும் கோரிக்கையை வலியுறுத்திய தொடர்  கையெழுத்து இயக்கத்தை  நடாத்த வருமாறு அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  மயில்வாகனம் திலகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் தொடர் கையெழுத்து இயக்கத்தை நடாத்தி  நாட்டு மக்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்து வெற்றி கண்டது போல ” “மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளர்களாக்கும்” இந்த இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் மலையகப் பாட்டாளிகள்  அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகர்  தெரிவித்து உள்ளார்.
ஜூன் முதலாம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து இலங்கை அரசினதும் சர்வதேச நாடுகள், நிறுவனங்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கத்தையும் மனு கையளிப்புகளையும் நடாத்த உள்ளதாகவும் திலகர்  தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் நிகழ்வில் இணைந்து கொள்ள விருப்பம் உள்ள நிறுவனங்கள் / அமைப்புகள்  பின்வரும் வட்சப் இயக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் – 
திலகர் – 0711208061
தொழிற்சங்கங்கள் – ஜோதி +94773443914
சுப்பிரமணி +94 77 288 8398
சிவில் அமைப்புகள் – 
ரேக்கா +94 71 655 4367
சுரேஷ் +94 71 614 3924
இளைஞர் அமைப்புகள் –
கனகராஜ் – +94 71 611 8651
வினோத் +94 76 960 1969
பண்பாட்டு இயக்கங்கள் ,
கலை, இலக்கிய அமைப்புகள் – திலகர் – 0711208061
தன்னார்வ அமைப்புகள்/ சர்வதேச நிறுவனங்கள் – கிருஷ்ணா 
+94 77 971 9192
அனைத்து  ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்களிடத்திலும் இந்த நியாயக் கோரிக்கைக்கு ஆதரவு தருமாறும் மலையக பாட்டாளிகள் அரங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here