ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தேயிலை தினம் ஒவ்வொரு வருடமும் மே 21 திகதி கொண்டாடப்படுகிறது.
இன்று சர்வதேச தேயிலை தினம் சர்வதேசத்தில் கொண்டாடப்படும் அதே சந்தர்ப்பத்தில் இலங்கையில் மலையக பிரதேசங்களிலும் சர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் (21) கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டிய நிகழ்வு ஒன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமான (ISD) நிறுவக ஏற்பாட்டில் இரத்தினபுரி நகரில் கொண்டாடப்பட்டது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக நிறைவேற்று பணிப்பாளர் பெ. முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலையக பெருத்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட பல்வேறு உரிமை சார் விடயங்களை உள்ளடக்கி தமது கோரிக்கைகளை எழுதிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
இதையடுத்து இந்த நிகழ்வுக்கான பொது கூட்டம் இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள்,அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதநிதிகள் அடங்களாக பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.