நோட்டனில் பாரிய மரம் வீழ்ந்து வீடொன்று : வீதி போக்குவரத்தும் பாதிப்பு

0
225

காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்ற நிலையில் நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிட்போட் கொலனியில் குடியிருப்பொன்றின் மீது மரமொன்று வீழ்ந்துள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் ஏற்பட்ட இவ் விபத்தில் குறித்த குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவ நேரத்தில் வீட்டினுள் ஒருவர் மாத்திரமே இருந்துள்ள நிலையில் அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

வீட்டினுள்ளிருந்து வீட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய மழையினால் நோட்டன் , வட்டவளை, பொகவந்தலாவை பகுதிகளில் குடிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் மண்சரிவுகளினால் நோட்டன் ஒஸ்போன் வீதி , கினிகத்தேனை அட்டன் வீதிகளின் போக்குவரத்தும் பல மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

நோட்டன் அட்டன் பிரதான வீதியின் மிட்போட் பகுதியில் வீதியின் குறுக்கே மரமொன்று சரிந்து வீழ்ந்தமையினால் இன்று காலை முதல் குறித்த வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையினால் நோட்டன் விமல சுரேந்திர மின்நிலையத்திற்கு அருகிலேயே மேற்படி மரம் வீதியில் வீழ்ந்துள்ளது.
வீழ்ந்து கிடக்கும் மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் நோட்டன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள அதே வேலை பம்பரகல பகுதியிலும் மண்மேடு சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here