நோர்வூட்,சமுர்த்தி பயனாளிகளின் பணம்  மோசடியா ?  தீவிர விசாரணை ஆரம்பம்

0
288
நோர்வூட் சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி பயனாளிகளின் பணத்தில் பாரிய அளவில் ஊழல் மோசடி இடம் பெற்றிருப்பதாக கிடைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரிப்பதற்கு குழு    ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளர்    .பி கே. நந்தன  தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில் இந்த விசாரணைகள் நிறைவடைந்த உடன் நோர்வூட் சமுர்த்தி வங்கியில் உண்மையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நோர்வூட் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும்  ஊழியர்களில் சிலர்  சமுர்த்தி பயனாளிகளின் நிவாரண பணம்,  முதியோருக்கான நிவாரண பணம்,  குறைந்த வருமான பெறுவோருக்கான  பெரியோருக்கான சுயதொழில் கடன் உதவித்தொகை,  ஆகியவற்றில் கோடிக்கணக்கான ரூபா ஊழல் மோசடி செய்திருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு பிரிவினருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.
12 கிராம சேவகர் பிரிவியில் உள்ள பிரிவுகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகளின் பணம் சூட்சுமமான  முறையில்  ஊழியர்கள் சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த காலங்களில் விபரம் சேகரிப்பு  அதிகாரிகளால் சமுர்த்தி வங்கியில் திடீரென சோதனை நடத்தப்பட்டிருந்ததோடு பல கோடி ரூபாய் ஊழல் மோசடிகள் இடம் பெற்றிருக்கலாம் என என்கிற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சமுர்த்தி வங்கி முகாமையாளர் உள்ளிட்டோருக்கு எதிராகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாகவும் விசாரணைகள் முடியும் வரை  முகாமையாளரை  தற்காலிகமாக இடமாற்றம் செய்வதில் அரசியல் அழுத்தங்கள காணப்படுவதாகவும் தெரியவரும்
இதேவேளை நோர்வூட் சமுர்த்தி பயனாளிகள் பலரின் சமுர்த்தி வங்கி புத்தகங்களை அந்த வங்கியில் உள்ள அதிகாரி ஒருவர் சேகரித்து வருவதாகவும் சமுர்த்தி பயனாளிகள் பல குற்றம் சுமத்துவதோடு ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக இவ்வாறு சமுர்த்தி பயனாளிகளின் வாங்கிப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது
பா.நிரோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here