இரு நூறு ஆண்டுகளாக இலங்கையி அடிமைகளாக நடாத்தப்படும் உழைப்பாளர் வர்க்கமான மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ” சிறு தோட்ட உடமையாளர்களாக்கு” எனும் ஒற்றைக் கோரிக்கையை ஒருமித்த கோரிக்கையாக இலங்கை அரசுக்கு முனவைக்கும் ஆரம்ப நிகழ்வு நாளை 2024 ஜூன் 01 ஆம் திகதி நுவரெலியா மாவட்டம் ஹங்குரங்கெத்த தொகுதி முல்லோயா தோட்டத்தில் இடம்பெறவுள்ளது.
மலையக பாட்டாளிகள் அரங்கத்தின் ஏற்பாட்டில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தலைமையில் இந்தக் கவனயீர்ப்பு பேரணி இடம் பெறவுள்ளது.
ஓர் உரிமைப் போராட்டத்துக்கான ஆரம்பமாக இலங்கைத் தேயிலையின் (Ceylon Tea ) தந்தை ‘ஜேம்ஸ் டெயிலர்’ (James Taylor) அவர்களின் நினைவிடத்தில் காலை 11 மணிக்கு ஒன்று கூடி அங்கிருந்து நடைபயணமாக, முதலாவது தேயிலைக்கன்று நாட்டப்பட்ட லூல்கந்துர தோட்டத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை அடுத்து,
முதல் மலையகத் தியாகி
‘முல்லோயா கோவிந்தன்’
கல்லறையில் போராட்ட உறுதி எடுத்தக் கொள்ளும் நிகழ்வு இடம்பெறுவதோடு அதனை அடுத்து முல்லோயா தோட்டத்தில் கூட்டமும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் மஸ்கெலியா -ஹட்டன்-தலவாக்கலை – நுவரெலியா -ஹைபொரெஸ்ட் வழியாக முல்லோயா செல்லும் பேருந்தில் இணைந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் தன்னார்வமாகவும் வந்து இணைந்து கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
தேசிய அமைப்பாளர்
சுரேஷ்
+94 71 614 3924 suresh
லியோ
+94 76 524 5774 Leo
“மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளரகளாக்கு”
என உலகமெங்கும் கேட்க முழங்குவோம் !
ஒழுங்கமைப்பு ;
மலையகப் பாட்டாளிகள் அரங்கம் ( MPA)