கம்பளை, அட்டபாகையில் மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு 

0
187

கம்பளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அட்டபாகை தோட்டத்தை ஊடறுத்துச்செல்லும் நீரோடையிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கலத்த அட்டபாகை கீழ் பிரிவைச்சேர்ந்த மூன்று பிளைளைகளின் தாயான 66 வயதுடைய குடாஎவகே கிமாராத சில்வா என்பவரே  தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நீரோடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (30 ) மதியம் பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்களைமைய மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதணைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளதாக தெரிவித்த பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக மழை காரணமாக அதிக வெள்ள நீர் பாய்ந்தோடிய  குறித்த நீரோடையில் தவறி விழுந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மரணம் தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here