மின்சார கட்டணங்களில் மாற்றம்

0
246

ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை  குறைக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பாவனைக்கான கட்டணத்தில் அதிக சலுகையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், இலங்கை மின்சார சபையினால் நாளை (07) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, 0-30 வரையான அலகுக்கு 8 முதல் 6 ரூபா வரையும், 30 – 60 வரையான அலகுக்கு 20 முதல் 9 ரூபா வரையும், 60- 90  வரையான அலகுக்கு 30 முதல் 18 ரூபா வரையும்,120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here