நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் தோட்ட நிர்வாகமும் , பெரண்டினா நிறுவனமும் இணைந்து டெஸ்போட் தோட்டத்தில் நான்கு பிரிவுகளில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு சென்று பொதுவான இடங்களுக்கு வரவழைத்து (06) வியாழக்கிழமை இலவசமாக குருதிப் பரிசோதனை செய்து இதில் காணப்பட்ட நோய்களை கண்டறிந்து அதற்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது .
குறித்த நிகழ்ச்சியில் தோட்ட அதிகாரிகளான தில்சன் டி சில்வா , திலூக்க மதுசங்க மற்றும் பெரண்டினா நிறுவனத்தின் ஜெயந்திமாலா, ரொஹான் உட்பட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் 220 தொழிலாளர்களுக்கு குருதி பரிசோதனை செய்து அவர்களுக்கான தேவையான மருந்து விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நானுஓயா நிருபர்