ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகமானது, கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (06) தனது அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார்.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.