நாட்டில் நீண்ட காலமாக அதிபர் ஆசிரியர்களின் சம்பள முறன்பாட்டுக்கு தீர்வு காணும் விடயம் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்ற நிலையில்
இந்த வருடமும் இந்த சம்பள முறன்பாட்டுக்கு தீரவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி ஏ.டி. சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முறன்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (11) மாலை கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்க பொது செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முறன்பாட்டுக்கு தீர்வு தொடர்பில் கல்வி அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற அமைச்சர் ஊடான சந்திப்பில் தொழிற்சங்க ஓன்றியத்தில் அங்கம் வகிக்கும் 16 அதிபர்,ஆசிரியர்கள் சங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.
இதன்போது கல்வி அமைச்சர் தெரிவித்ததாவது அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் ,ஆர்ப்பாட்டங்கள் என களமிறங்கினாலும் சரி, அல்லது பாடசாலைகளை மூடக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் சரி இந்த வருடம் எக்காரணத்தை கொண்டும் எங்களால் சம்பள உயர்வை வழங்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
காரணம் ஏற்கனவே அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பகுதி வழங்கப்படவில்லை. இதில் ஒரு பகுதியை நாம் வழங்கியிருந்தால் அரச சேவையில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியிருக்க முடியாது.
ஆகவே ஒரு சாராருக்கு மாத்திரமே சம்பளத்தை வழங்கியிருக்க முடியும் ஆனால் இப்போது அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர்கள்,ஆசிரியர்களின் சம்பள முறன்பாடு இந்த வருடத்தில் எம்மால் தீர்க்க முடியாது.
அதேநேரத்தில் அமைச்சரான நான் அமைச்சு பதவியில் இன்னும் ஓரிரு மாதங்கள் மாத்திரமே இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்ததாகவும்,
எனவே 2025 ஆம் ஆண்டு வரவு/செலவு திட்டத்தில் அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முறன்பாட்டை தீர்ப்பதற்கு முழு வேலைகளை தான் செய்யப்போவதாகவும்,
அது அரசாங்கத்தில் உள்ளே அமைச்சு பதவியில் இருந்தாலும் சரி, அல்லது வெளியில் இருந்தாலும் சரி இவ்விடயத்தில் தனது பங்களிப்பு அதில் கூடுதலாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.
அதேநேரம் இதுவரைக்கும் இல்லாத மேலதிக எழுத்து பணிகளுக்கும் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க ஒரு யோசனையை இத்தருணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிரியர் இடமாற்ற சபையில் உள்ள குறைப்பாடுகள் கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் இடமாற்ற சபையில் உள்ளவர்கள் யாரும் மீள் பரிசோதணை சபையில் இருக்க முடியாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஓர் யோசனை முன்வைத்தார்.
அதில் வெகு விரைவில் வலைய மட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தெளிவூட்டல் ஒன்றை வழங்க உள்ளதாகவும், ,அதில் அதிபர்,ஆசிரியர்கள் வலய கல்வி பணிமனைக்கு சென்று அவர்களின் பிரச்சிணைகளை தெரிவிக்கும் போது அவர்களை கௌரவத்துடன் நடத்தி அவர்களுடைய தீர்க்க கூடிய பிரச்சிணைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானமும் எடுக்கப்பட்டது.
எது எவ்வாறான இருந்தாலும் சம்பள முறன்பாட்டுக்கான தீர்வு இவ்வருடம் இல்லையென்று அமைச்சர் சொல்லியுள்ள நிலையில் எங்களுடைய போராட்டங்கள் ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என நாம் தெரிவித்துள்ளதாக எஸ்.பாலசேகரம் மேலும் தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்.